நெய்வேலி, கனிமவளச் சுரண்டல்…

வலைப்பதிவுகள்
 • நெய்வேலி, கனிமவளச் சுரண்டல்…
  by தமிழ் சசி | Tamil SASI on April 8, 2018 at 11:07 pm

  தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்தியத் தனியார் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கனிம வளச் சுரண்டலில் இந்தியாவெங்கும் ஈடுபட்டு வருகின்றன. கனிம வளங்களைச் சுரண்டத் தோண்டப்படும் சுரங்கங்களும் (Mining), பிராக்கிங் (Fracking) போன்றவை எந்தப் பெரிய தொழில்வளர்ச்சியையும் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெரிய அளவில&#3021

 • செந்தில்-ராசலட்சுமியின் நாட்டுப்புறப்பாடல்கள்…
  by தமிழ் சசி | Tamil SASI on February 19, 2018 at 4:57 am

  பல பாடகர்களை அறிமுகப்படுத்திய விசய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இன்று இரு நாட்டுப்புறப்பாடகர்களை நம்பி சூழன்று கொண்டிருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்களை, பாடகர்களை, நடிகர்களைத் தங்கள் மேடைக்கு அழைந்து வந்துள்ள விசய் தொலைக்காட்சி இது வரைக்கும் நாட்டுப்புறப்பாடல்களை வெகுசன மக்களிடம் அதன் இயல்புகளுடன் கொண்டு சென்ற விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளை அழைக்கவே இல்லை என்பது ஆச்சரியம் இல்லை.

 • மார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்
  by தமிழ் சசி | Tamil SASI on February 5, 2017 at 2:19 am

  நியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்த&#3009

 • ஜெயமோகனின் முதலாளித்துவம்
  by தமிழ் சசி | Tamil SASI on November 21, 2016 at 1:29 am

  எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையைப் படிக்க நேரிட்டது. அவரின் சார்புகளை அவருடைய சார்புகளாக வைத்து விடுவோம்.  ஆனால் அவர் எழுதியிருப்பதில் உள்ள சிலச் சிக்கல்களை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவருடைய கட்டுரையின் தொனி அவர் அறிந்தோ, அறியாமலோ இந்தியாவில் இருக்கிற “நட்பு முதலாளித்துவத்தை” (Crony Capitalism) அவர் ஆதரிக்கும் தொனியாகவே மாறிவிட்டது. நான் முதலாளித்துவத்தை நிராகரிப்பவன&#3021

 • அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம்
  by தமிழ் சசி | Tamil SASI on October 23, 2016 at 4:19 am

  (இது 2011ல் எழுதியப் பதிவின் மீள்பதிவு) வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால&#3021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *